புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகம் இரண்டு இடங்களை கைப்பற்றிய நிலையில் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நேயம் மக்கள் கட்சி ஒரு இடத்தை வெற்றி பெற்றது. இதன் மூலம் புதுச்சேரியில் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் கூட்டணி சார்பில் மொத்தம் மூன்று எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 30 இடங்களில் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பெரும்பான்மை கிடைத்த ஆட்சி அமைக்க நிலையில் மீண்டும் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகர் தலைமையில் அமைச்சர்கள் அனைவரும் எம்எல்ஏக்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அப்போது தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ ராமு சட்டசபை உறுப்பினராக பொறுப்பேற்கும் போது கடவுள் மேல் அணையிடுகிறேன் என கூறி தமிழ்நாடு முதல்வர் விஜயின் புகைப்படத்தை காண்பித்தார். உடனே துணை சபாநாயகரும் அதிமுக எம்எல்ஏவுமான அன்பழகன் அவரை கண்டித்ததோடு ஏற்கனவே 1008 கடவுள்கள் இருக்கிறார்கள் இதில் இவர் 1009-வது கடவுளை கொண்டு வருகிறார் என்று விமர்சித்தார். மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.