தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக 164 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும் நிலையில் மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் களம் காண்கிறது. நேற்று ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பெண்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்று கூறினார்.
அதன் பிறகு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் இனி மாதம் ரூ.1500 வழங்கப்படும். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இனிமேல் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். உயர்கல்வி மாணவர்கள் 35 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும் கடந்த ஐந்து வருடங்களில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளதாகவும் மகளிர்க்கு முன்கூட்டியே 5000 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டதாகவும் கூறிய முதல்வர் ஸ்டாலின் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக கூறினார்..
