சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. இதில் மகளிர், மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையிலான பல்வேறு அதிரடி வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி
இல்லத்தரசி கூப்பன்: பழைய வாஷிங் மெஷின், ஃப்பிரிட்ஜ், மிக்ஸி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைக் கடைகளில் மாற்றிக் கொடுத்துப் புதிய பொருட்கள் வாங்க, அரசு சார்பில் ரூ.8,000 மதிப்பிலான ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கப்படும்.
மகளிர் உரிமைத் தொகை உயர்வு: தற்போது வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்படும்.
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டம் இனி 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.
புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள்: இத்திட்டங்களின் கீழ் இனி மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும்.
உயர்கல்வி மாணவர்களுக்கு லேப்டாப்: 35 லட்சம் உயர்கல்வி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.
நவீன பம்பு செட்டுகள்: மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்பு செட்டுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
நெல் கொள்முதல் விலை: நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.4,500-ஆக உயர்த்தப்படும்.
அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்: ஒன்றரை லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
புதிய வீடுகள்: 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்குக் கடன்: மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படும்.
ஐடி ஏற்றுமதி உயர்வு: ஐடி ஏற்றுமதி ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.
கோயில் சீரமைப்பு: 5 ஆயிரம் கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்படும்; ஆயிரம் கிராமக் கோயில்கள் சீரமைக்கப்படும்.
புதிய நகரங்கள்: திருச்சி, மதுரை, கோவை, சேலம் அருகே நவீன புதிய நகரங்கள் அமைக்கப்படும்.
திமுகவின் இந்தத் தேர்தல் அறிக்கை அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு கதாநாயகன் மட்டுமல்ல கதாநாயகியும் கூட என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
