திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய 8 வயது சிறுமியை பின்தொடர்ந்தது கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பிஸ்வகர்மா (35) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரை கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி போலீசார் ஆந்திராவில் வைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் 5 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. மேலும் அதன்படி குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 1.45 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.