கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் (IG) ரம்யா பாரதி அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூலூர் சிறுமி கொலை வழக்கில், தீவிர விசாரணை நடத்திய காவல்துறை, குற்றவாளிகளான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை ஏற்கனவே கைது செய்திருந்தது. இந்நிலையில், இவர்களின் குற்றப் பின்னணி மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களைக் கருத்தில் கொண்டு, இவர்களை ஓராண்டு ஜாமீனில் வெளிவர முடியாதபடி குண்டர் தடுப்புச் சட்டத்தின்  கீழ் சிறையிலடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.