ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே உள்ள பிரபல பெண் ரவுடியும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலைக்கு, வேறொரு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி ரியல் எஸ்டேட் தரகரிடம் கந்துவட்டி வசூல், கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்திய நிலையில், 2 ஆண்டுகள் தண்டனை என்பதால் மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கூறி, நீதிமன்ற பிணைக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார்.