சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 96,240 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12,030 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சில்லறை வர்த்தகத்தில் இன்று வெள்ளி விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 207 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 207000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
