தமிழகத்தில் வரைவு வாக்காளர் திருத்த பணிகள் கடந்த 14ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் இன்று வரைவு வாக்காளர் திருத்தப்பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழ்நாட்டில் சுமார் 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வழக்கம்போல் பெண்கள் வாக்காளர்களே இந்த முறையும் அதிகமாக உள்ளது. அதன்படி ஆண் வாக்காளர்கள் 2,66,63,233 பேரும், பெண் வாக்காளர்கள் 2,77,06,332 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7191 பேரும் இருக்கிறார்கள்.

மேலும் இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதி வாய்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெறாவிட்டால் அவர்கள் ஜனவரி 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.