திரூவாருர் மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதுள்ளது. இன்று காலை அரசு பேருந்து அந்த வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வேனின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆம்னி வேனில் சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தனர்.
அதன்பிறகு இந்த விபத்தில் 3 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் சரிவர தெரியாத நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
