உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் மேம்பாலத்தில் இன்று காலை பரபரப்பான விபத்து ஏற்பட்டது. வேகமாக சென்ற கார் ஒன்றின் முன் திடீரென நாய் குறுக்கே வந்ததால், கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த டேங்கர் லாரியில் மோதி சிதைந்தது.

இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த ஐந்து பேர் படுகாயம் அடைந்து, அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் முற்றிலும் சேதமடைந்த நிலையில், மேம்பாலத்தில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு, விபத்து தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.