தேனி மாவட்டம் கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி முத்துப்பிள்ளை. வயது முதிர்வு காரணமாக முத்துப்பிள்ளை வேலைக்கு செல்ல முடியாமல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் யாசகம் பெற்று வந்தார். இவரது மகன் ராஜேந்திரனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நேற்று முத்துப்பிள்ளை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டிலில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் தனது தாயை கட்டுனோடு இழுத்து வந்து மருத்துவமனை முன்பு இருக்கும் தேனி மதுரை சாலை நடுவே விட்டார். இதனை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டு சாலையோரம் இருந்த மரத்தடியில் அமர வைத்தனர்.
இதே போல சாலை நடுவே படுத்து கிடந்த ராஜேந்திரனையும் மீட்டனர். அந்த பகுதி மக்கள் ராஜேந்திரன் அடிக்கடி முத்துப் பிள்ளையை அடித்து துன்புறுத்தியதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் போலீசார் மூதாட்டியை முதியோர் காப்பகத்திற்கும், ராஜேந்திரனை மனநல காப்பகத்திற்கும் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
