திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருக்கும் கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் பெரிய மோட்டூர் ஊராட்சி தத்தி வட்டம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை(30) என்ற வாலிபருக்கும் திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெற்றதாக குழந்தைகள் உதவி எண்ணிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மகளிர் ஊர்க்காவல் அலுவலர் கலைச்செல்வி விசாரணை நடத்தினார்.
அந்த விசாரணையில் ஏழுமலை 16 வயது சிறுமியை திருமணம் செய்தது உறுதியானது. இது குறித்து கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிறுமி மற்றும் வாலிபரின் பெற்றோருக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
