வேலூர் கோட்டையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போலீஸ்காரர் திடீரென நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயசீலன் என்பவர் 15 வது பாட்டாளியின் அலுவலக கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை ஜெயசீலன் வேலூர் கோட்டையில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது.
உடனே மயங்கி விழுந்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெயசீலன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
