நாமக்கல் மாவட்டம் படம் முடிப்பாளையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் கோவிலுக்கு சென்று விட்டு திருச்செங்கோடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தை உட்பட இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.