சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி 22 தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 840 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 66 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 8,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 9083 ரூபாயாகவும், ஒரு சவரன் 72664 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 114 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,14,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.