சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 12,070 ரூபாய்க்கும், ஒரு சவரன் 720 ரூபாய் வரையில் உயர்ந்து 96,580 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு கிராம் 13,167 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,05,336 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 4 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 196 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,96,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
