சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1440 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,18,880 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,860 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 16,211 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,29,688 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு பத்து ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 3,00,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.