சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1120 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 95840 ரூபாய்க்கும், ஒரு கிராம் 11980 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 13069 ரூபாய்க்கும், ஒரு சவரன் 104552 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 193 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 193000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
