வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் டெல்டா மற்றும் வட தமிழகக் கடலோரப் பகுதிகளை நெருங்கி நல்ல மழையைக் கொடுக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வந்த நிலையில், இன்று  (நவ. 29) அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாண்டு நாட்காட்டியில் சனிக்கிழமை (நவ. 29) விடுமுறை என்றே குறிப்பிடப்பட்டிருப்பதால், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அன்றைய தினம் விடுமுறைதான் என்று உறுதி செய்தனர்.

மேலும், மழை பெய்யும் பகுதிகளில் உள்ள பள்ளிகள், விடுமுறைக் காலத்தில் எந்தவொரு சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என்றும் பள்ளிக்கல்வித் துறை கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.