சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,870 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 16, 222 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 776 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி மூன்று லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.