சென்னை: தமிழகத்தில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (ஜனவரி 31, 2026) மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,26,800-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.7,600 அதிரடியாகக் குறைந்து ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.15,850-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.950 குறைந்து ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையிலும் பெரும் சரிவு காணப்படுகிறது.
நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.4,05,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.55,000 சரிந்து ரூ.3,50,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் தங்கத்தை விற்பனை செய்து வருவதால் இந்தத் திடீர் விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
