ஒன்றிய அரசின் இந்த அதிரடி அறிவிப்பு, நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பேரிடியாக இறங்கியுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை (Import Duty) அதிரடியாக 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தங்கம் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், இந்த வரி உயர்வு சாமானிய மக்களின் நகை வாங்கும் கனவை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

குறிப்பாக, “அடுத்த ஒரு ஆண்டிற்கு மக்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்” எனப் பிரதமர் மோடி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், இந்த வரி உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையை இன்னும் பல மடங்கு உயர்த்தும் என்பதால், நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.