கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த தக்காளி விலை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால், சில்லறை வணிக கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இன்று தக்காளி விலையை குறைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதால், மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.