தனது ஜப்பான், சிங்கப்பூர் பயணத்தை ஆளுநர் ரவி விமர்சித்ததற்கும் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் தமிழ்நாடு மீது தவறான தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் ஆளுநரால், அரசின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவருக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால் தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என ஆவேசத்துடன் எச்சரித்தார்