பெங்களூரு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று கிருஷ்ணகிரி சென்ற அவருக்கு திடீரென மேல் வயிற்றில் வலி ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களூரு மருத்துவமனையில் அவருக்கு தீவிர பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஒரு நாள் முழுக்க சிகிச்சை பெற்ற அவர், சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் சில நாட்கள் ஓய்வில் இருப்பார் என்று தெரிகிறது