சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்றும் விலை ₹40 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 9110 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம்‌ 9938 ரூபாய்க்கும், ஒரு சவரன் 79504 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 125 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 125000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.