திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் உள்ள ஜவ்வாது மலைவாழ் மக்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வடக்கு மண்டல திரளணி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “வகுப்பறைகளில் மாணவர்களை ” ப-வடிவில்” உட்கார வைப்பது கட்டாயமில்லை. அது கட்டாயம் என்றால், மாணவர்களுக்கு சுமை ஏற்படும், கழுத்து வலிக்கும் என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஆனால், இது எங்கும் கட்டாயம் எனக் கூறியதில்லை. ‘ப’ வடிவ இருக்கை முறையில் பயிற்சி பயனுள்ளதாக இருந்தால் பயன்படுத்தலாம் என்பதே அரசின் நிலைபாடு” எனத் தெரிவித்தார்.

அத்துடன், “தொடக்க நிலை பள்ளிகளில் குழந்தைகளை ‘ப’ வடிவ போலவே உட்கார வைக்கிறோம். இதன் மூலம், ஆசிரியர் மாணவர்களுக்குப் பயிற்சியை நேரடியாக அளிக்க வசதியாகும். ஆனால் இது கட்டாயம் கிடையாது. வகுப்பறையின் முன் பகுதியில் போட்டு பாடம் நடத்த வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்போது, “ப-வடிவ”  நடைமுறையை தன் விருப்பப்படி பின்பற்ற விரும்பும் பள்ளிகள் பின்பற்றலாம் என்ற அளவிலே தான் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கல்வியில் மாணவர்களுக்கு சீரான வசதிகள் உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.