தமிழக இந்து சமய அறநிலையத்துறை மிக முக்கியமான அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 246 கோடி ரூபாய் பிரம்மாண்ட மதிப்பீட்டில் கட்டப்படவிருந்த பல்வேறு கோயில் திருமண மண்டபப் பணிகளுக்கான நிர்வாக அனுமதியை அறநிலையத்துறை தற்போது அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
திருக்கோயில்களின் தற்போதைய நிதிச்சுமையினைக் கருத்தில் கொண்டே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மண்டபப் பணிகளை நிறுத்துவதன் மூலம் மிச்சமாகும் நிதி ஆதாரத்தைக் கொண்டு, பக்தர்கள் நேரடியாகப் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய மற்றும் சிறப்பான திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இந்த மண்டபக் கட்டுமானப் பணிகள் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது ஆன்மிக வட்டாரத்திலும், பொது மக்கள் மத்தியிலும் தற்போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
