அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் மற்றும் விசிக ஆகிய கட்சிகளை கூட்டணிக்கு நேரடியாக அழைத்த நிலையில் அவர்கள் கூட்டணிக்கு வர மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

அதன் பிறகு அதிமுக கூட்டணியில் ஒரு பிரம்மாண்ட கட்சி வர இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்த பிரம்மாண்ட கட்சி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதாவது சீமான் தனித்துப் போட்டியிடுவோம் என்று கூறிய நிலையில் நடிகர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர்கள் எனவும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையில் தான் கூட்டணி எனவும் அறிவித்துள்ளார்.

இப்படி இருக்கையில் அந்த பிரம்மாண்ட கட்சி எது என்று எதிர்பார்க்க செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் தேர்தல் யுக்தி மற்றும் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது என்றார். அப்படி என்றால் அவர் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தவில்லை என மறுக்கவில்லை.

அதே நேரத்தில் விஜய் இறங்கி வந்தால் பாஜக உடனான கூட்டணியை முறித்துவிட்டு தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு உங்கள் வியூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்றார். அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை ஒப்பிட முடியாது என கூறிய எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சிகளுக்கும் தனித்தனி பலம் இருப்பதாக தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் ஆகியோரை கூட்டணியில் சேர்த்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் யார் வந்தாலும் இணைத்துக்கொள்வோம் என்றார். மேலும் விஜய் உடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை எடப்பாடி பழனிச்சாமி மறுக்காமல் சூசகமாக பதில் சொன்னதால் அந்த பிரம்மாண்ட கட்சி எதுவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.