முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதி தேர்தல் தோல்வி விவகாரம், திமுகவின் உட்கட்சிக்குள் ஒரு மிகப்பெரிய பூகம்பமாக வெடித்துள்ளது. முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீதான துர்கா ஸ்டாலினின் கோபம் வெறும் தேர்தல் தோல்வியோடு மட்டும் நின்றுவிடவில்லை; அதற்குப் பின்னால் ஒரு பெரிய சதித் திட்டம் இருப்பதாக அவர் சந்தேகிக்கிறார். இந்தத் தோல்விக்கு பின்னணியில் மிகப்பெரிய அரசியல் காய்நகர்த்தல்கள் இருப்பதாக நம்பும் துர்கா அம்மையார், சேகர்பாபுவை நேரில் வரவழைத்து அடுக்கடுக்கான நம்பிக்கைத் துரோகக் கேள்விகளை எழுப்பி ஆவேசமாகச் சாடியுள்ளார்.
செய்த விசாரணைப் பதிவுகளின்படி, “தேர்தல்ல நீங்களும் உதயநிதியும் மட்டும் எப்படி ஜெயிச்சீங்க? தலைவரே தோத்துப்போய், உதயநிதி ஜெயிச்சு சி.எம். ஆகிட்டா, அவரை உங்களோட பிடிக்குள்ள வச்சுக்கிட்டு நீங்க ஆட்டம் போடலாம்னு பிளான் பண்ணிதான் தலைவரைத் தோக்கடிச்சீங்களா?” என்று துர்கா ஸ்டாலின் மிகவும் கோபமாகக் கேட்டுள்ளார். மேலும், “நீங்க எங்களுக்குப் பண்ணுனது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்; இதை என்னால எப்போதுமே மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது” எனத் துர்கா அம்மையார் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார். துர்கா ஸ்டாலினின் இந்த அதிரடி குற்றச்சாட்டும் ஆவேசப் பேச்சும் தற்போது சென்னை அரசியல் வட்டாரத்தை மொத்தமாக உலுக்கி எடுத்துள்ளது.
