தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதோடு மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி மற்றும் தென்காசி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 23ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஒரு சில இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. இங்கு வெப்பநிலை 80° முதல் 90 டிகிரி பாரன் ஹீட் வரை இருக்கக்கூடும்.

மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று முதல் வருகிற 20-ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.