சென்னை மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதாவது அந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஜேசிபி இயந்திரம் ஒன்று சாலையை கடக்க முயன்றது.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி பேருந்து திடீரென ஜேசிபி வாகனத்தின் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 12 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக மதுராந்தகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.