தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பல தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

தமிழக வெற்றி கழகம் தற்போது வரை 100 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுகவும் பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக சொந்த தொகுதியில் முதல்வர் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் 13 அமைச்சர்களும் பின்னடைவில் இருக்கிறார்கள். அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கிட்டத்தட்ட தமிழக வெற்றி கழகத்தில் வேட்பாளரிடம் 4500 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் முன்னிலையில் இருக்கும் நிலையில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் தான் முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.