தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பல தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
தமிழக வெற்றி கழகம் தற்போது வரை கிட்டத்தட்ட 92 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலையில் இருக்கிறது. 2021 தேர்தலில் திமுக வென்ற அத்தனை தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலையில் இருக்கும் நிலையில் சொந்த தொகுதியான கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார். அங்கு தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர் விஎஸ் பாபு 4130 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் ஸ்டாலின் 3,244 வாக்குகள் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 1000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
