தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பல தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

தமிழகத்தில் இன்று காலை 10 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகம் 92 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணி 67 இடங்களிலும் திமுக 59 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. நாம் தமிழர் கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட முன்னிலை கிடைக்கவில்லை. மேலும் திமுக தொடர்ந்து மூன்றாம் இடத்தில் இருந்து வருவது தற்போது அந்த கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.