தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பல தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
தமிழக வெற்றி கழகம் 92 இடங்களுக்கு மேல் தற்போது முன்னிலையில் இருக்கும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி யில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு சுயேட்சை வேட்பாளர் 6375 வாக்குகள் பெற்று காலை 10.05 நிலவரப்படி முன்னிலையில் இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி 6187, வாக்குகளும் திமுக வேட்பாளர் காசி 6180 வாக்குகளும் பெற்றுள்ளார். எடப்பாடி தொகுதியில் மட்டும் விசில் சின்ன போட்டியிடாத நிலையில் டிவி சின்னத்திற்கு விஜய் ஆதரவு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
