நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர்  பாலியல் புகார் கொடுத்திருந்ததோடு தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து ஏழு முறை கருக்கலைப்பு செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்குகளை திரும்ப பெற வேண்டுமென கூறியது. அதே நேரத்தில் இருவரும் தங்கள் மனுக்களை திரும்ப பெறுவதோடு மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவுறுத்தியது.

சீமான் இந்த வழக்கில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இனி நடிகையை தொந்தரவு செய்ய மாட்டேன் எனவும் உறுதி கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதாவது சீமான் தொடர்ந்து அவதூறாக பேசுவதாகவும் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நடிகை தரப்பில் கேட்கப்பட்டிருந்தது. மேலும் சீமான் மன்னிப்பு மனுவை தாக்கல் செய்யவில்லை எனில் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.