இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான திரு. ஆர். நல்லகண்ணு அவர்கள், திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இன்று (டிசம்பர் 14) சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நூறாவது வயதை எட்டியுள்ள திரு. நல்லகண்ணு அவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்ததைத் தொடர்ந்து இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார். தற்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது
