​நாகப்பட்டினம்: 2026-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் அனைத்தும் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

இதன் ஒருபகுதியாக, தமிழக வெற்றி கழகமும்  மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை முடுக்கிவிட்டுள்ளது. இந்தச் சூழலில், நாகப்பட்டினம் மாவட்டத்தில், அதிமுக, திமுக, தேமுதிக, மனிதநேய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்தும் விலகிய சுமார் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

​நாகை மாவட்டச் செயலாளர் மா. சுகுமாறன் முன்னிலையில் அவர்கள் தங்களை த.வெ.க.வில் இணைத்துக்கொண்டனர். புதிதாக இணைந்த நிர்வாகிகள் அனைவரும் விரைவில் கட்சித் தலைவர் திரு. விஜய்யை நேரில் சந்திப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.