வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கான கணக்கீட்டுப் படிவத்தை இன்று சமர்ப்பிப்பதற்கு கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் இன்றுடன் (டிசம்பர் 14) நிறைவு பெறுகின்றன. இந்தத் திருத்தப் பணிகளின் மூலம் புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மூலம் இதுவரை 99.55 சதவீதம் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தச் சிறப்புத் திருத்தப் பணிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல், டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
