அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தம் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த முறைகேடு வழக்கில் மீண்டும் எஸ்.பி வேலுமணி சேர்க்கப்பட்டுள்ளார். அதாவது இந்த வழக்கில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக மீண்டும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது எஸ்.பி வேலுமணிக்கு சிக்கலாக அமையும் என்று கூறப்படுகிறது.
