கிழக்கு ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவான நிலையில் நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி, சபதேர மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு கிராமங்களில் உள்ள வீடுகள் நிலநடுக்கத்தால் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 250 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டரசு முதல்கட்டமாக  அறிவித்த நிலையில் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2500 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.