தமிழகத்தில் இந்த முறை சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழக வெற்றி கழகம் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிக்கப்படுகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் அனைத்து தொகுதிகளையும் தமிழக வெற்றி கழகத்தினர் கைப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் திமுகவினரும் பல இடங்களில் வெற்றி வாகை சூடி வருகிறார்கள். அந்த வகையில் இந்த முறை கரூரில் இருந்து கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி மீண்டும் ஒருமுறை தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் செந்தில் பாலாஜி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் முதல்வர் ஸ்டாலின் அவர் கண்டிப்பாக வெல்வார் என்ற நம்பிக்கை வைத்த நிலையில் அவரது நம்பிக்கையை காப்பாற்றி செந்தில் பாலாஜி மீண்டும் கோவை தெற்கில் வெற்றி வாகை சூடினார்.