சென்னை புறநகர் பகுதியின் மிக முக்கியமான தொகுதியான தாம்பரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சரத்குமார் 35,175 வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலை வகித்து வந்த அவர், ரவுண்டுக்கு ரவுண்டு எதிரணி வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி அசுர பலத்தை நிரூபித்தார்.

திமுக மற்றும் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் தாம்பரத்தில், தவெக சார்பில் போட்டியிட்ட சரத்குமார் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதியில் நிலவிய அடிப்படைப் பிரச்சனைகளை முன்னிறுத்தி அவர் செய்த தீவிரப் பிரச்சாரத்திற்குத் தொகுதி மக்கள் மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக் கொண்டாடும் வகையில், தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை முழுவதும் தவெக தொண்டர்கள் திரண்டு மஞ்சள் மற்றும் சிவப்பு கொடிகளுடன் உற்சாக முழக்கமிட்டு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.