தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழக வெற்றிக்கழகத்தினர் வரலாறு காணாத அளவில் பல இடங்களை கைப்பற்றிய கிட்டத்தட்ட ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல தொகுதிகளை அந்த கட்சியின் வேட்பாளர்கள் கைப்பற்றி வெற்றி வாகை சூடி உள்ளன. அதே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளும் பல இடங்களில் வெற்றிவாகை சூடி வருகிறது.

அந்த வகையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆக இருந்த வைத்திலிங்கம் சமீபத்தில் திமுகவில் இணைந்த நிலையில் மீண்டும் தஞ்சை ஒரத்தநாடு தொகுதியில் களம் கண்டார். இவர் தற்போது அதே தொகுதியில் மீண்டும் வெற்றி வாகை சூடியுள்ளார். மேலும் இதேபோன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக போட்டியிட்ட செந்தில் பாலாஜியும் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தற்போது தவெக மற்றும் அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி வெற்றி வாகை சூடினார்.