தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் மிக முக்கியமான தொகுதியான பெரம்பூரில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிட்டார். அவரது வெற்றியைத் தடுக்கும் நோக்கில், அதே பெயரிலும் அவரது இயற்பெயரான ஜோசப் என்ற பெயரிலும் பல சுயேச்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். 9 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இந்த ‘பெயர் குழப்ப’ அரசியல் முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் விஜய் என்பவர் வெறும் 9 வாக்குகளையும், சுயேச்சை வேட்பாளர்களான G.விஜய் 37 வாக்குகளையும், S.ஜோசப் 28 வாக்குகளையும், M.ஜோசப் வெறும் 13 வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளனர். வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வாக்குகளைப் பிரிக்க எடுக்கப்பட்ட இந்த முயற்சி, விஜய்யின் அசுர வேக முன்னிலையில் அடிபட்டுப் போயுள்ளது. மக்கள் தெளிவான முடிவோடு தவெக-வின் சின்னத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது இந்த வாக்கு எண்ணிக்கையில் தெளிவாகத் தெரிகிறது.
