ஈராக் நாட்டின் தென்பகுதியில் உள்ள நஸிரியா நகரில் ஈரான் பக்தர்கள் சென்ற பேருந்து, லாரி மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.