தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான முதல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்நிலையில் நடிகர் விஜய் சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரமாக ரசிகர்களின் கூட்ட நெரிசல் காரணமாக கடந்து மரக்கடையை வந்தடைந்தார். நடிகர் விஜய்க்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்த நிலையில் பரிசுகளும் கொடுத்தனர். ஒரு ரசிகர் விஜய்க்கு கூலிங் கிளாஸ் பரிசாக கொடுத்த நிலையில் ஒருவர் டீஷர்ட் கொடுக்க அதில் விஜய் கையெழுத்து போட்டு அவருக்கு கொடுத்தார்.

அதே நேரத்தில் விஜய் திருச்சி மரக்கடை பகுதியில் நுழையும்போது கையில் வெயில் வைத்திருந்தார். அதனை ரசிகர் ஒருவர் பரிசாக கொடுத்ததாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் அடுத்த வருடம் நடைபெறும் ஜனநாயக போருக்காக குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்ததாக திருச்சியில் தன்னுடைய முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். மேலும் தற்போது திருச்சியில் தன்னுடைய பிரச்சாரத்தை முடித்த விஜய் அடுத்ததாக அரியலூர் புறப்பட்டு சென்றுள்ளார்.