வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 203 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் வணிக சிலிண்டர் விலை 157 ரூபாய் குறைந்த நிலையில் இந்த மாதம் 203 ரூபாய் உயர்ந்து 695 ரூபாயிலிருந்து 1898 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. விலை உயர்வால் கடை நடத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனைப் போலவே வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றம் இன்றி 918 ரூபாய்க்கு விற்பனையாகிறது.