சென்னையில் ஆபரண தங்கம் விலை , இன்று (ஆக. 22) அதிரடியாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ₹73,720 ஆகவும், ஒரு கிராமுக்கு ₹9,215 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நேற்று அதிரடியாக ரூ. 400 அதிகரித்த நிலையில் இன்று குறைந்தது சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது
இந்த விலை மாற்றம், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பங்குச் சந்தை அதிர்வுகள், டாலர் மதிப்பு ஏற்ற இறக்கங்கள் மற்றும் பொருளாதார எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்கும் முன் சந்தை நிலவரத்தை சற்று கவனமாக பின்தொடர அறிவுறுத்தப்படுகிறது.
